பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம்

19 views
1 min read
radhe_shyam1xx

 

பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற பிரபாஸின் புதிய படம் பற்றிய அறிவிப்பும் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியுள்ளன.

பாகுபலி படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதற்கு அடுத்ததாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடிக்கிறார்.

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகிறது. 

கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.

TAGS
Prabhas

Leave a Reply