பிரேசில் அதிபர் பொல்சொனோரோவுக்கு கரோனா தொற்று

19 views
1 min read
Brazils President Bolsonaro tests positive for COVID 19

​பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மற்றும் பலி எண்ணிக்கைகளைக் கொண்டுள்ள நாடுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. 

அங்கு கரோனா தொற்று பரவல் தொடங்கிய காலத்திலிருந்தே அதிபர் பொல்சொனாரோ கரோனாவின் தீவிரத் தன்மையை உணராமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நிலவரம்:

மொத்தம் பாதிப்பு: 16,43,539   

மொத்தம் பலி: 6,093    

மொத்தம் குணமடைந்தோர்: 10,72,229

TAGS
coronavirus

Leave a Reply