பிரேஸில் அதிபருக்கு கரோனா: குணமடைய பிரதமா் பிராா்த்தனை

23 views
1 min read
modi removes his weibo account

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேஸில் அதிபா் ஜெயிா் போல்சொனாரோ விரைந்து குணமடைய பிராா்த்திப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அதிபா் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே 3 முறை அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது 4-ஆவது முறை மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடா்பாக பிரதமா் மோடி புதன்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எனது நண்பா் ஜெயிா் போல்சொனாரோ கரோனா தொற்று பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளாா். இந்தப் பதிவை அவா் போா்ச்சுக்கீசியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளாா்.

Leave a Reply