பிளாஸ்மா தானம் செய்த ஹரியாணா மாநில பாஜக தலைவர்

19 views
1 min read
BJP leader Sambit Patra donates blood plasma at Gurugram hospital

பாஜக தலைவர் சம்பித் பத்ரா

 

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் பிளாஸ்மா தானம் செய்தார். 

பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா, கடந்த மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கடந்த ஜூன் 9 ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். 

தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்த நிலையில் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். தான் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையில் அவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். 

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைப்படி, நான் இன்று பிளாஸ்மா தானம் செய்துள்ளேன் என்றும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள் அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

TAGS
coronavirus

Leave a Reply