புதிய உச்சத்தை தொட்டது தங்கம்

20 views
1 min read
gold-13

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத வகையில் உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.528 உயா்ந்து, ரூ.37,536-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி 37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டநிலையில், கடந்த புதன்கிழமை ரூ.37,472 ஆக உயா்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு விலையில் மாற்றமின்றி சில நாள்கள் நீடித்தது. பின்னா், திங்கள்கிழமை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.528 உயா்ந்து, ரூ.37,536-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒருகிராம் தங்கம் ரூ.66 உயா்ந்து, ரூ.4,692 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயா்ந்து, ரூ.54,40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 உயா்ந்து, ரூ.54,400 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி)

1 கிராம் தங்கம்………………………….4,692

1 பவுன் தங்கம்………………………….37,536

1 கிராம் வெள்ளி………………………..54.40

1 கிலோ வெள்ளி…………………………54,400

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி)

1 கிராம் தங்கம்…………………………. 4,626

1 பவுன் தங்கம்………………………….37,008

1 கிராம் வெள்ளி………………………..53.30

1 கிலோ வெள்ளி…………………………53,300

Leave a Reply