புதுக்கடை சந்தையில் வியாபாரிக்கு கரோனா: சந்தை மூடல்

22 views
1 min read
santhai

 

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காய், கனி சந்தையில் உள்ள பெண் வியாபாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் சனிக்கிழமை சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.

புதுக்கடை பேரூராட்சிக்குள் பட்ட காய், கனி சந்தை புதுக்கடை பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இங்குச் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள திரளான பொதுமக்கள் பொருள்கள் வாங்கி செல்வர்.

இந்நிலையில் சனிக்கிழமை புதுக்கடை சந்தையில் உள்ள காய், கனி பெண் வியாபாரி உள்பட அந்த பகுதி ஆர்.சி தெருவில் உள்ள 6 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் 5 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.

மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சளி மாதிரி எடுத்து கரோனர பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், அரசியல் கட்சியினர் அவ்வப்போது நடத்தப்படும் போராட்டங்கள், கூட்டங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் .கிரிமி நாஷினி ஆகியவைகளை முறையாக கடைப்பிடிக்காத காரணத்தால் நோய் பரவல் தடுப்பில் பின்னடைவு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றன,

TAGS
Corona

Leave a Reply