புதுக்கோட்டை: பாப்பாயி அரசு மருத்துவமனை மருந்தாளுநருக்கு கரோனா; மருத்துவமனை மூடல்

16 views
1 min read
மூடப்பட்டுள்ள மருத்துவமனை.

மூடப்பட்டுள்ள மருத்துவமனை.

புதுக்கோட்டை:  அரசு மருத்துவமனை மருந்தாளுநர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதைத் தொடா்ந்து பாப்பாயி அரசு மருத்துவமனை வியாழக்கிழமை மூடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி வலையபட்டி பாப்பாயி அரசு மருத்துவமனையில்
பணிபுரியும் மருந்தாளுநர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்தாளுநரின் மகள் சென்னையிலிருந்து அண்மையில் வந்ததால் தொற்று பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனை முழுவதும் தீயணைப்பு வீரர்களினால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மருத்துவமனை மூடப்பட்டது. மேலும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ‌ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையின் மற்றொரு நுழைவு வாயில் திறக்கப்பட்டு அந்த பகுதியில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply