புதுச்சேரியில் மேலும் 30 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 739-ஆக அதிகரிப்பு 

29 views
1 min read

கோப்புப்படம்

 

புதுவையில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 739 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:

புதுவையில் புதன்கிழமை 634 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 19 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 6 பேர் ஜிப்மரிலும், 5 பேர் மாஹே பிராந்தியத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. 
கரோனா தொற்று வந்த பிறகு புதுச்சேரி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடந்த 100 நாட்களாக குடும்பத்தைக் கூட பார்க்காமல் மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர். அனைவருக்கும் தேசிய மருத்துவர் தினத்தையொட்டி வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

TAGS
coronavirus

Leave a Reply