புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கரோனா தொற்று இல்லை

19 views
1 min read
kiran bedi

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. 

முன்னதாக ஆளுநர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து,  புதுவை துணை நிலை ஆளுநா் மாளிகை புதன்கிழமை மூடப்பட்டது. ஆளுநர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை நிலை ஆளுநர் மற்றும் அவரது தனி அலுவலகத்தில் உள்ள ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில், ஆளுநர் கிரண்பேடிக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அதேபோன்று இதுவரை ஊழியர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

TAGS
coronavirus

Leave a Reply