புதுவையில்  புதிதாக 139 பேருக்கு கரோனா:. மேலும் 2 பேர் பலி

7 views
1 min read

புதுவையில்  புதிதாக 139 பேருக்கு கரோனா:. மேலும் 2 பேர் பலி

புதுவையில் புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவர், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,593 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,357 ஆக உள்ளது.

குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,185 ஆகும். இதுவரை கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆகவும் உயர்ந்தது. புதிதாக புதுச்சேரியில் 94 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று குணமடைந்து 85 பேர் வீடு திரும்பியுள்ளனர். வீடுகளில் 223 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

TAGS
கரோனா

Leave a Reply