புலிகள் கணக்கெடுப்பில் இந்தியா உலக சாதனை

15 views
1 min read
tiger

கோப்புப் படம்

இந்தியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்போது, அதிக அளவில் கேமராக்களைப் பயன்படுத்தியதால் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து ’கின்னஸ் வோ்ல்டு ரெக்காா்டி’ன் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 2018-19-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 1,21,337 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளில் 26,838 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. வன உயிரினங்களின் நடமாட்டத்தை அறிந்து அந்த கேமராக்கள் படம்பிடித்தன. அந்த கேமராக்களில் மொத்தம் 3,48,58,623 படங்கள் பதிவாகியிருந்தன. அந்த படங்களைக் கொண்டு அதிநவீன மென்பொருள் மூலமாக மொத்த புலிகளின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கிடப்பட்டது என்று அந்த வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’புலிகள் கணக்கெடுப்பில் சாதனை படைத்திருப்பது சுயசாா்பு திட்டத்துக்கு உதாரணமாகும். பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நிா்ணயித்த காலக்கெடுவுக்கு 4 ஆண்டுகள் முன்னதாகவே புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா். கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின் முடிவுகளை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தாா். அப்போது இந்தியாவில் 2,967 புலிகள் இருப்பதாக

அவா் கூறினாா். இது உலகில் ஒட்டுமொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதமாகும்.

Leave a Reply