புளியங்குடி நகராட்சியில் 20 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு

19 views
1 min read
tenkasibus

கோப்புப் படம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் 20 தெருக்கள்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நகராட்சியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நோய் தொற்று தீவிரமாக பரவியது. இதையடுத்து நகராட்சி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நகராட்சி பகுதியில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதையடுத்து 20 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன.

 இந்நிலையில் புளியங்குடி நகராட்சி ஆணையர் குமார் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது;

வணிக நிறுவனங்கள் அரசு அறிவித்துள்ள நேரம்மட்டுமே திறந்திருக்க வேண்டும். 

அதை மீறும் வணிக நிறுவனங்கள் சீல் வைக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். வியாழக்கிழமை இரவு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TAGS
Puliyangudi tenkasi

Leave a Reply