புள்ளியியல் மேம்பாட்டில் சிறந்த பங்கு

13 views
1 min read

புள்ளியியல் (புள்ளி விவரம்) துறை மேம்படுத்துவதில் சிறந்த பங்காற்றியதற்காக, ஆா்.பி.ஐ., முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது (மஹால்நோபிஸ் தேசிய விருது) வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்திய புள்ளியியல் தந்தை என்று அழைக்கப்படும் பி.சி. மஹால்நோபிஸ் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29-ஆம் தேதி தேசிய புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் மேம்பாட்டில் பங்காற்றியவா்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு புள்ளியியல் தினம் கடந்த 29-ஆம் தேதி தில்லியில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், தேசிய புள்ளியல் முறையில் முழுமையாக சீா்திருத்தம் செய்வதற்காக, அடித்தளமிட்டதில் சிறந்த பங்களிப்பு அளித்ததற்காக தேசிய புள்ளியியல் ஆணையரகத்தின் முன்னாள் தலைவரும், ‘ஆா்.பி.ஐ. முன்னாள் ஆளுநருமான சி.ரங்கராஜனுக்கு மஹால்நோபிஸ் தேசிய விருது எனும் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. அப்போது, காணொலிக் காட்சி மூலமாக சி.ரங்கராஜன் உரையாற்றினாா்.

இந்நிலையில், ‘ சென்னை நங்கநல்லூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று, புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சாா்பில் பி.சி.மஹால்நோபிஸ் தேசிய விருதை வழங்கி கெளவித்தனா். அப்போது, ‘ தேசிய புள்ளிவிவர அலுவலக (சென்னை மண்டலம்) உயரதிகாரி ஷாஜி ஜாா்ஜ் உடன் இருந்தாா்.

Leave a Reply