பெங்களூரு நகரம், ஊரக மாவட்டங்களில் 10 நாள்களுக்கு முழு பொது முடக்கம்

21 views
1 min read
Complete lockdown in Bengaluru Urban and Rural districts from 8 pm on 14th July to 5 am on 23rd July in view rising COVID19 cases. Essential services exempted: Karnataka Chief Minister's Office (CMO)

பெங்களூரு நகரம் மற்றும் ஊரக மாவட்டங்களில் ஜூலை 14 இரவு 8 மணி முதல் ஜுலை 22 காலை 5 மணி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

பெங்களூரு நகரம் மற்றும் ஊரக மாவட்டங்களில் ஜூலை 14 இரவு 8 மணி முதல் ஜுலை 22 காலை 5 மணி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும் மருத்துவமனை, பால், காய் மற்றும் பழங்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு எவ்விதத் தடையும் இல்லை என்று கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அரசு அறிவித்துள்ள பொது முடக்க வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TAGS
coronavirus

Leave a Reply