பெண் காவலருக்கு கரோனா: 2-வது முறையாக போத்தனூர் காவல் நிலையம் மூடல்

23 views
1 min read
WhatsApp_Image_2020-07-07_at_3

போத்தனூர் காவல் நிலையம் மூடல்

 

கோவை போத்தனூர் காவல் நிலைய பெண் தலைமை காவலருக்கு கரோனா உறுதியானதால் இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

கோவையில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட முதல் நிலை பணியாளர்களுக்கு அடிக்கடி கரோனா பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் தலைமை காவலருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரை ஆம்புலென்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் காவல் நிலையம் முழுவது கிருமி நாசினிகள் தெளித்து தொற்று நீக்கம் செய்தனர். மேலும் மாநகர ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. 

கடந்த ஏப்ரல் மாதம் இதே காவல் நிலையத்தில் மூன்று காவலர்களுக்கு தொற்று உறுதியானதால் மூடப்பட்ட நிலையில் இரண்டாவது முறையால் கரோனா தொற்று பாதிப்பால் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. அலுவலக பணிகள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே பெண் காவலர் குடியிருப்பு அமைந்துள்ள வெள்ளலூர் பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. அவரது கணவர் உள்பட 6 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
 

Leave a Reply