பென்னாகரம் அருகே பொதுநிலத்தினை ஆக்ரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

22 views
1 min read
pngm

பென்னாகரம் அருகே ஏரியூர் புதுச்சோளப்பாடியில் பொதுவழி மற்றும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை கண்டித்தும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏரியூர் அருகே இராம கொண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதுச்சோளப்பாடி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் காளி அம்மன் ஆலயமானது ஊரின் மையப் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள ஆலய இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு கட்டி உள்ளனர். 

விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்வதற்காகவும், புதுச்சோளப்பாடியில் இருந்து ஈச்சப்பாடி செல்ல உள்ள பொதுவழியை சிலர் அடைத்து வீடு கட்டி இருப்பதாக கூறி செவ்வாய்கிழமை பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நில ஆக்ரமிப்புகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி அரசு அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

புதுச்சோளப்பாடி பகுதியில் பொது வழி மற்றும் கோயில் நிலத்தினை ஆக்ரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தினை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

TAGS
protest Pennagaram

Leave a Reply