பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவு நோயாளிகள் உணவு வாங்க மறுப்பு

16 views
1 min read
Corona patients at Periyakulam Government Hospital

கோப்புப்படம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்டோர் கரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 9 பேர் 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 29 மற்றும் 30-ம் தேதியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்றுவரை வரவில்லை.

இதனால் 9 பேரும் காலை மற்றும் பிற்பகல் உணவுகளை புறக்கணித்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இவர்களுடன் மருத்துவமனை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார். மாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரின் முடிவுகள் நெகடிவ் என வந்ததையடுத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

TAGS
coronavirus

Leave a Reply