பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களுக்கு தனி கரோனா சிகிச்சை மையம்

15 views
1 min read

பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மையம் உள்ளது.இங்கு 40-க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 பேருக்கு கடந்த புதன் கிழமை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு அவர்களை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வந்தனர்.

கரோனா மையத்தில் 30க்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மனநலம் பாதித்தவர்களால் அச்சத்தை ஏற்படுத்துவதாக புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கரோனா பாதித்த 5 மனநோயளிகளுக்காக பெரிய குளம் அரசு மருத்துவமனையில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

இந்த பிரிவில்  5 பேரும் வெள்ளிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply