பெரியபாளையம் அருகே சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி

17 views
1 min read
accident

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சரக்கு ஏற்றி வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பேட்டைமேடு கிராமத்தில் சரக்குகளை ஏற்றி கொண்டு தாமரைப்பாக்கம் நோக்கி சென்ற லாரியும், வெங்கல் கிராமத்தில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. பின்னால் வந்த சரக்கு வாகனம் ஒன்றும் லாரியின் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த இருவர், சரக்கு வாகன ஓட்டுநர், லாரி ஓட்டுநர் என 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் காரில் பயணித்த வெங்கலை சேர்ந்த தீனதயாளன் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply