பெரியபாளையம் காவல்நிலையத்தில் காவலருக்கு கரோனா: காவல் நிலையம் மூடல்

17 views
1 min read
பெரியபாளையம் காவல்நிலையம்

பெரியபாளையம் காவல்நிலையம்

பெரியபாளையம் காவல்நிலையத்தில் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பூவிருந்தவல்லி அருகே தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 

காவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் மூடப்பட்டது.

Leave a Reply