பெரியார் பல்கலையில் பாதுகாவலருக்கு கரோனா: வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு 

18 views
1 min read
1

பெரியார் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

 

பெரியார் பல்கலையில் பாதுகாவலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 55 வயதான நபர் ஒருவருக்கு கரோனாத் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவருடன் பணியிலிருந்த மற்ற பாதுகாவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் துணைவேந்தர் குழந்தைவேல் உத்தரவின்பேரில் பெரியார் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று நடைபெற்றன.

துணை வேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம், தேர்வாணையர் அலுவலகம் மற்றும் அந்த பாதுகாவலர் பணியாற்றிய இடங்கள், சென்று வந்த பகுதிகள் முழுமையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. தீயணைப்புத்துறை வாகனம் மூலம் அனைத்து கட்டடங்களிலும் உயரமான பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பெரியார் பல்கலைக்கழக மாணவியர் விடுதிகள் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை மையம் செயல்பட்டு வருவதால் கடந்த ஜூன் 25ஆம் தேதி முதல் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு பணிக்கு வருவதிலிருந்து தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

TAGS
coronavirus

Leave a Reply