பொதுமுடக்கம்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கும் பணி தொடக்கம்

21 views
1 min read
Violators maintain social distancing and wait in queue to collect vehicle keys after paying fine during lockdown in Chennai.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கும் பணி தொடக்கம்

 

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் பணி இன்று தொடங்கியது.

தமிழகத்தில் பொதுமுடக்கக் காலத்தில் விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றியதாக சுமார் 6 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் நீண்ட வரிசையில் நின்றிருந்த வாகன ஓட்டிகள், அபராதம் செலுத்தி, தங்களது வாகனங்களுக்கான சாவியைப் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் அவர்களது வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அது உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தியது. இந்த உத்தரவை மீறியவர்களை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி பொதுமுடக்கக் காலம் வரை பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

நேற்றுடன் பொதுமுடக்கம் நிறைவு பெற்ற நிலையில், வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி இன்று பல்வேறு பகுதிகளில் தொடங்கியது.
 

TAGS
lockdown

Leave a Reply