பொது முடக்கக் கால நிவாரணம் கோரி மாற்றுத் திறனாளிகள் அடையாள ஆர்ப்பாட்டம்

18 views
1 min read
WhatsApp_Image_2020-07-07_at_2

நாகக்குடையான் ஊராட்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் .

 

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பொது முடக்கக் கால நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8 இடங்களில் அடையாள ஆர்ப்பாப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொது முடக்கக்காலத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாப்பு நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு மணி நேரப் பணி வழங்கி முழு ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதம் உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கமிட்டனர். 

நாகக்குடையான் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஊராட்சி மன்றத் தலைவர் ராசேந்திரனிடம் அரசுக்கான கோரிக்கை மனுவை அளித்தனர்.
 

Leave a Reply