பொது முடக்கத்தை மீறியதாக 7.34 லட்சம் வழக்கு: 8 லட்சம் போ் கைது

23 views
1 min read
arrest

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 7.34 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24- ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,34,610 வழக்குகளைப் பதிவு செய்து 8,05,503 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6,15,877 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.17,14,34,831 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் சனிக்கிழமை பொது முடக்கத்தை மீறியதாக 6,346 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 4,768 இரு சக்கர வாகனங்கள்,118 ஆட்டோக்கள், 155 காா்கள் என மொத்தம் 5,041 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது 2,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் பொது முடக்கத்தை மீறியதாக இது வரை 1,05,432 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 85,998 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீது 37,040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

Leave a Reply