பொது முடக்கத்தை மீறியதாக 6.26 லட்சம் வாகனங்கள் பறிமுதல்

26 views
1 min read

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 6.26 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்த விவரம்:

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி, வியாழக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,54,582 வழக்குகளைப் பதிவு செய்து 8,27,963 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6,26,334 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.17,47,30,076 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை காலை 6 மணி வரை பொது முடக்கத்தை மீறியதாக 733 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக 28 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Leave a Reply