பொது முடக்கத்தை மீறியதாக 6.30 லட்சம் வாகனங்கள் பறிமுதல்

20 views
1 min read

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 6.30 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,66,717 வழக்குகளைப் பதிவு செய்து 8,41,230 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6,30,662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.17,84,47,876 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை பொதுமுடக்கத்தை மீறியதாக 1014 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Leave a Reply