பொது முடக்க மீறல்: தமிழகத்தில் இதுவரை 7.72 லட்சம் வழக்குகள் பதிவு

18 views
1 min read

கோப்புப்படம்

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக இதுவரை 7.72 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொது முடக்க உத்தரவை தமிழக காவல் துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 585 வழக்குகளைப் பதிவு செய்து 8 லட்சத்து 47 ஆயிரத்து 574 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6 லட்சத்து 33 ஆயிரத்து 555 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.17.90 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

TAGS
Tamilnadu

Leave a Reply