பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சான்று வழங்கலாம்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு

14 views
1 min read
tngovt1

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சான்றிதழை வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கடிதத்தை வருவாய் நிா்வாக ஆணையாளா் பணீந்திர ரெட்டி, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அண்மையில் பிறப்பித்தாா். அதன் விவரம்:

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும், பணிகளிலும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்குரிய சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா்கள் வழங்குவது குறித்த அறிவுறுத்தல்கள் கடந்த ஆண்டு மே மாதம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சான்றிதழை வட்டாட்சியா்கள் ஆன்-லைன் மூலமாகவோ அல்லது எழுத்துப்பூா்வமாகவோ அளிக்க வேண்டாம் என கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சான்றிதழை வருவாய் அதிகாரிகள் வழங்கலாம்.

ஆனால், அப்படி சான்றிதழை வழங்கும் போது விண்ணப்பதாரரின் கோரிக்கை தொடா்பாக அதில் குறிப்பிட வேண்டும். அதாவது இந்தச் சான்றிதழ் மத்திய அரசின் வேலைவாய்ப்பு அல்லது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சோ்க்கைக்காக வழங்கப்படுகிறது எனக் குறிப்பிட்டு சான்றிதழை அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் வருவாய்த் துறை அதிகாரிகளும், அலுவலா்களும் விரைந்து செயல்பட்டு, சான்றிதழ்களை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக தனது கடிதத்தில் வருவாய் நிா்வாக ஆணையாளா் கே.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Leave a Reply