போடியில் கட்டுப்பாடுகள் அமல்: வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன

16 views
1 min read
போடியில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிய தெருக்கள்.

போடியில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிய தெருக்கள்.

 

போடி: போடியில் வெள்ளிக்கிழமை முதல் தளர்வுகளின்றி கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டதால் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ள நிலையில் பல வார்டுகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து நகராட்சி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து வெள்ளிக்கிழமை (ஜூலை 10) முதல் தளர்வுகள் ஏதுமின்றி அனைத்துவிதமான வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றை மூட உத்திரவிடப்பட்டது. 

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் தி.கிருஷ்ணமூர்த்தி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், ஜூலை 10 முதல் ஜூலை 23 வரை முழுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை போடி நகராட்சி பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக மூடப்பட்டன. பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டன. காலையில் நகர் முழுவதும் அதிக அளவில் வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். ஏலக்காய் வியாபாரிகள் போடி சந்தை பேட்டை தெருவில் அதிகம் காணப்பட்டனர். நேரம் செல்லச் செல்ல நகர் முழுவதும் மக்கள் நடமாட்டம் குறைந்து பிற்பகலில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

போடியில் மருந்தகங்கள், மருத்துவமனைகள், கூட்டுறவு வங்கிகள் திறந்திருந்தன. தலைமை தபால் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் இயங்கியது. சார்பதிவாளர் அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி கூட்டம் காணப்பட்டது. நகராட்சி ஆணையாளர் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடைகளின் முன் அமர்ந்திருந்த பொதுமக்களை வெளியேற்றினர்.

Leave a Reply