போலி கரோனா பரிசோதனை சான்றிதழ் மூலமாக பயணம்: தில்லி தம்பதி மீது வழக்குப்பதிவு

17 views
1 min read
Himachal: Delhi couple caught producing fake Covid negative certificate, case registered

கோப்புப்படம்

கரோனா வைரஸ் பரிசோதனை குறித்த போலிச் சான்றிதழை வழங்கிய தம்பதியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தில்லியைச் சேர்ந்த தம்பதி, ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். வழியில் காவல்துறையினர் நிறுத்தவே, தங்களிடம் உள்ள கரோனா பரிசோதனை சான்றிதழை வழங்கியுள்ளனர். 

பிரபல ஆர்.எம்.எல் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தங்கள்இருவருக்கும்  கரோனா தொற்று இல்லை என்றும் கூறினர். சான்றிதழும் மருத்துவமனையின் பெயரில் இருந்தது. 

சான்றிதழ் குறித்து சந்தேகித்த காங்க்ரா மாவட்ட எஸ்.பி. சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரித்தபோது அது போலி எனத் தெரிய வந்தது. 

இதை அடுத்து கணவன், மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TAGS
delhi

Leave a Reply