மகாராஷ்டிரத்தில் நாளை முதல் 33% இருக்கைகளுடன் உணவகங்கள் திறப்பு

18 views
1 min read
PlasticBan_Hotels_750

மகாராஷ்டிரத்தில் நாளை முதல் 33% இருக்கைகளுடன் உணவகங்கள் திறப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் புதன்கிழமை முதல் 33% இருக்கையுடன் உணவகங்கள், விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் திறக்கப்படலாம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திங்கள்கிழமை மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கரோனா தொற்று அதிகமாக இருக்கும் மும்பை மாநகராட்சி, புணே உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற இடங்களில் மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பெரிய மால்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தடை விதித்துள்ளது.

உணவகங்கள், விடுதிகளுக்கு வருவோரின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளோடு, மகாராஷ்டிரத்தில் நாளை முதல் உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.
 

TAGS
coronavirus

Leave a Reply