மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,827 பேருக்கு கரோனா தொற்று

20 views
1 min read
Maharashtra reported 7,827 new COVID 19 cases and 173 deaths in the last 24 hours, taking total number of cases to 2,54,427 including 1,40,325 recoveries and 10,289 deaths: State Health Department

​மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 7,827 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 7,827 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 7,827 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 173 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,54,427 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 10,289 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை மொத்தம் 1,40,325 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 1,03,516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,263 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 44 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 92,720 ஆகவும், பலி எண்ணிக்கை 5,285 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 1,441 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 64,872 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 22,556 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

TAGS
coronavirus

Leave a Reply