மகாராஷ்டிரத்தில் 2.50 லட்சத்தைக் கடந்த கரோனா தொற்று எண்ணிக்கை!

19 views
1 min read
Maharashtra corona update

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.50 லட்சத்தைக் கடந்துள்ளது.

 

மும்பை: மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.50 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு ஞாயிறு இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 7,827 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 2,54,427 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல இன்று ஒரே நாளில் மேலும் 173 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 10,289 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply