மகாராஷ்டிரத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

25 views
1 min read

மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,330 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,330 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,330 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,86,626 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 125 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 8,178 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 8,018 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,01,172 பேர் குணமடைந்துள்ளனர்.  

மும்பை:

மும்பையில் புதிதாக 1,554 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 57 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 80,262 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 4,686 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று மட்டும் 5,903 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 50,694 ஆக உயர்ந்துள்ளது.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 2 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TAGS
coronavirus

Leave a Reply