மணப்பாறை அருகே ரூ.2.22 கோடி மதிப்பில் புதிதாக ஆற்று பாலம்:  அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் அடிக்கல் நாட்டினர்

18 views
1 min read
மணப்பாறை அருகே முதல்வரின் 110-விதியின் கீழ் ரூ.2.22 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் ஆற்று பாலம் - அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டினர்.

மணப்பாறை அருகே முதல்வரின் 110-விதியின் கீழ் ரூ.2.22 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் ஆற்று பாலம் – அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டினர்.

 

மணப்பாறை அருகே முதல்வரின் 110-விதியின் கீழ் ரூ.2.22 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் ஆற்று பாலம் – அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டினர்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆரிக்கோன்பட்டி – திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வண்ணாரப்பட்டி இடையே வேம்பனூரில் அமைந்துள்ள வெள்ளாற்றை கடந்து செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும், இதனால் ஆற்றினைச் சுற்றியுள்ள 30-க்கும் மேறபட்ட கிராமங்கள் பயனடையும் என அப்பகுதி மக்களால் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வரால் கடந்த கூட்டத்தொடரில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் அமைக்க 110-விதியின் கீழ் ரூ.2.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.1 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கியது.

அதன்படி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ.2.22 கோடி மதிப்பில் வேம்பனூர் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமணி நடராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் பூமி பூஜை – அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். 

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் கபசுர குடிநீரை வழங்கினர். 

அதனைத்தொடர்ந்து ஆரியகோன்பட்டியில் 2018-2019 பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலான நாடக மேடையையும் அமைச்சர் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply