மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்

18 views
1 min read
protest

வேலையிழந்துள்ள ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்

 

கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்துள்ள ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடந்த இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த  3 மாதங்களாக ஆம்னி பேருந்துகள் ஓடவில்லை. இதனால்  ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் பேர் வேலையின்றி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆகவே  ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துவதாக ஓட்டுநர்கள் கூறினர். மேலும் உண்ணாவிரதம் இருக்கப்  போவதாக அறிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

TAGS
போராட்டம்

Leave a Reply