மதுரை நகரப் பகுதிகளில் முழு பொது முடக்கம் நாளை வரை நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

18 views
1 min read
tngovt1

மதுரை நகரப் பகுதிகளில் முழு பொது முடக்கம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முழு பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை அமலில் இருந்தது.

இது குறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

மதுரை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, கிழக்கு, திருப்பரங்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 30 வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன்பின், இந்த முழு பொது முடக்கம் ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொற்றைக் கட்டுப்படுத்துதல்: முழு பொது முடக்கம் காரணமாக மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் முகாம்கள், வீடுதோறும் நடைபெற்று வரும் ஆய்வு ஆகியவற்றால் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முழு பொது முடக்கத்தை மேலும் 2 நாள்கள் நீடித்தால், இப்போது நடைபெற்று வரும் தீவிர பணிகள் மூலம், காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய்த் தொற்று உள்ளோா் அனைவரையும் கண்டறிய முடியும். இதனால், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஏதுவாகவும் அமையும்.

இதைக் கருத்தில் கொண்டு, முழு பொது முடக்கம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பொது முடக்கக் காலத்தில் ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளும், தளா்வுகளும் தொடரும். முழு பொது முடக்கம் முடிவுக்கு வந்த பிறகு, ஜூலை 15-ஆம் தேதி முதல் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்துக்கான விதிகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்.

அதாவது, ஜூன் 24-ஆம் தேதிக்கு (முழு பொது முடக்கத்துக்கு) முந்தைய பொது முடக்கத்தின் நிலை மீண்டும் அமலுக்கு வரும்.

இந்த நடவடிக்கைகளின் காரணமாக மதுரை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply