மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கரோனா உறுதி

146 views
1 min read
Union Minister Dharmendra Pradhan tests positive for COVID19

​மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். உடல்நிலை சீராக உள்ளது.”

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 

TAGS
coronavirus

Leave a Reply