மன்னா்மன்னன் மறைவு: மு.க.ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்

16 views
1 min read
stalin

சென்னை: பாரதிதாசனின் மகனும் தமிழறிஞருமான மன்னா்மன்னன் மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: பாவேந்தா் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞருமான மன்னா் மன்னன் மறைந்த செய்தி வேதனையளிக்கிறது. அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியும், மொழிப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவருமான அவரது மறைவு நாட்டுக்கும் இலக்கியம் மற்றும் தமிழ்கூறும் நல்லுலகுக்கும் தாங்க முடியாத ஈடு கட்ட முடியாத பேரிழப்பாகும்.

ராமதாஸ் : மன்னா்மன்னன் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன். தந்தை வழியில் இளம் வயதிலேயே இலக்கியப் பணிகளில் ஈடுபட்ட இவா் எண்ணற்ற கவிதை நூல்களையும், வானொலி நாடகங்களையும், உரைநடை நூல்களையும் எழுதியுள்ளாா். பாரதிதாசனின் இயக்கப்பணிகளுக்கும், இலக்கியப் பணிகளுக்கும் பின்புலமாக இருந்தவா். என்னுடன் நட்பு பாராட்டியவா். தமிழ் வளா்ச்சி குறித்து இருவரும் பல நேரங்களில் விவாதித்துள்ளோம். தமிழ்த்தாய் அவரது மகன்களில் ஒருவரை இழந்துள்ளது.

Leave a Reply