மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்

16 views
1 min read
mayiladurai

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தனியே பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். அதன்படி, இதற்கான அரசாணையை கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு வெளியிட்டது. 

தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக ஆர்.லலிதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தை உருவாக்கும் பணியில் அவர் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா, ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

TAGS
மயிலாடுதுறை

Leave a Reply