மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய குல்பூஷண் மறுப்பு: பாகிஸ்தான் 

20 views
1 min read
Pakistan claims Kulbhushan Jadhav refused to file review petition against his death sentence v

மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய குல்பூஷண் மறுப்பு: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத்தாக்கல் செய்ய குல்பூஷண் ஜாதவ் மறுப்புத் தெரிவித்திருப்பதாகவும், தற்போது நிலுவையில் இருக்கும் கருணை மனு மீதான முடிவுக்காகக் காத்திருக்கப் போவதாகக் கூறிவிட்டதாக பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

குல்பூஷண் ஜாதவ், தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் கருணை மனு மீதான முடிவுக்காக காத்திருப்பதாகக் கூறி, மரண தண்டனைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் அரசு அளித்த வாய்ப்பை நிராகரித்திருப்பதாக பாகிஸ்தான் அரசு வழக்குரைஞர் அகமது இர்பான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பாா்த்ததாக அந்நாட்டு ராணுவம் கடந்த 2016-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் அவரைக் கைது செய்தது. அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிா்த்து, தி ஹேக் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சா்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டது. இந்தியா சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே வாதாடினாா்.

இதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை நிறுவேற்றுவதற்கு சா்வதேச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், அவா் தூதரக உதவி பெறுவதற்கு பாகிஸ்தான் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சா்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

TAGS
death sentence

Leave a Reply