மாத உத​வித் தொகை திட்டம்: இளம் வழக்​கு​ரை​ஞர்​கள் வர​வேற்பு

15 views
1 min read
(கோப்புப்படம்)

(கோப்புப்படம்)

சென்னை: இளம் வழக்​கு​ரை​ஞர்​க​ளுக்கு 2 ஆண்​டு​க​ளுக்கு மாதம் ரூ.3 ஆ​யி​ரம் உத​வித்​தொகை வழங்​கப்​ப​டும் என்ற தமி​ழக அர​சின் அறி​விப்பு வழக்​கு​ரை​ஞர்​க​ளி​டையே பெரும் வர​வேற்பை பெற்​றுள்​ளது.

உலகை தனது கட்டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வந்​துள்​ளது கரோனா தொற்று. இதன் பர​வ​லைத் தடுக்க பொது மக்​கள் அதி​க​மாக கூடு​வ​தைத் தவிர்க்​க​வும், தனி​ம​னித இடை​வெ​ளி​யைக் கடை​பி​டிக்​க​வும் வலி​யு​றுத்​தப்​ப​டு​கின்​ற​னர். 
கரோனா பர​வ​லைத் தடுக்க நாடு முழு​வ​தும் கடந்த மார்ச் மாத​இ​றுதி வாரம் தொடங்கி இம்​மாத இறுதி வரை பொது முடக்​கம் நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது. இத​னால் சிறு, குறு தொழில்​கள் முதல் பெரு நிறு​வ​னங்​கள் வரை கடு​மை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளன. பொது​மக்​கள் அதி​க​மாக கூடும் பல்​வேறு இடங்​கள், வழி​பாட்​டுத் தலங்​கள் மற்​றும் நீதி​மன்​றங்​கள் மூடப்​பட்​டுள்​ளன.

சென்னை உயர்​நீ​தி​மன்​றம், உயர்​நீ​தி​மன்ற மது​ரைக் கிளை உள்​பட தமிழ்​நாடு, புதுச்​சே​ரி​யில் உள்ள அனைத்து  நீதி​மன்​றங்​க​ளும் கடந்த நூறு நாள்​க​ளுக்கு மேல் மூடப்​பட்​டுள்​ளன. அவ​சர வழக்​கு​கள் மட்டுமே காணொலி முறை​யில் விசா​ரிக்​கப்​ப​டு​கின்​றன. நீதி​மன்​றங்​க​ளில் நேர​டி​யாக விசா​ரணை நடை​பெ​றா​த​தால் வழக்​கு​ரை​ஞர்​கள் குறிப்​பாக இளம் வழக்​கு​ரை​ஞர்​கள் வரு​வாய் இல்​லா​மல் கடு​மை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ள​னர். 

இளம் வழக்​கு​ரை​ஞர்​க​ளுக்கு உத​வித்​தொகை வழங்​க​வும், நீதி​மன்​றங்​க​ளைத் திறந்து நேர​டி​யாக விசா​ரணை நடத்​த​வும் கோரி தமிழ்​நாடு புதுச்​சேரி பார் கவுன்​சில் தொடர்ந்து வலி​யு​றுத்தி வந்​தது. அதே நேரத்​தில் பொது முடக்​கத்​தால் வரு​மா​னம் இல்​லா​மல் பாதிக்​கப்​பட்ட 12 ஆயி​ரத்து 251 இளம் வழக்​கு​ரை​ஞர்​க​ளுக்கு நீதி​ப​தி​கள், மூத்த வழக்​கு​ரை​ஞர்​கள் ஆகி​யோர் பங்​க​ளிப்​பு​டன் தலா ரூ.4,000 நிதி உத​வியை தமிழ்​நாடு புதுச்​சேரி பார்​க​வுன்​சில் வழங்​கி​யது.

இந்​நி​லை​யில் தமி​ழக முதல்​வர் எடப்​பாடி கே.ப​ழ​னி​சாமி, தமி​ழ​கத்​தில் உள்ள இளம் வழக்​கு​ரை​ஞர்​க​ளுக்கு 2 ஆண்​டு​க​ளுக்கு ரூ.3 ஆ​யி​ரம் மாத உத​வித் தொகை​யாக வழங்​கப்​ப​டும் என உத்​த​ர​விட்​டுள்​ளார். தமி​ழக அர​சின் இந்த அறி​விப்பு, மூத்த வழக்​கு​ரை​ஞர்​கள், இளம் வழக்​கு​ரை​ஞர்​கள் மற்​றும் பெண் வழக்​கு​ரை​ஞர்​க​ளி​டம் மிகுந்த வர​வேற்​பைப் பெற்​றுள்​ள​ளது.

இது​தொ​டர்​பாக தமிழ்​நாடு புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்.​அ​மல்​ராஜ் கூறி​யது: 

சட்டக் கல்​லூ​ரி​க​ளில் படித்து முடித்​த​வர்​கள் தற்​கா​லிக மதிப்​பெண் சான்​றி​த​ழு​டன் (புர​வி​ஷ​னல் சர்​டி​பிகேட்) பார் கவுன்​சி​லில் வழக்​கு​ரை​ஞர்​க​ளா​கப் பதிவு செய்​வர். இந்​தப் பதிவு முடிந்​த​தி​லி​ருந்து அவர்​கள் வழக்​கு​ரை​ஞர்​க​ளா​கின்​ற​னர். இந்த நடை​முறை கடந்த 2010- ஆம் ஆண்டு ஜூலை மாதத்​துக்​குப் பின் வழக்​கு​ரை​ஞர்​க​ளா​கப் பதிவு செய்​ப​வர்​கள், அகில இந்​திய பார் கவுன்​சில் நடத்​தும் தேசிய அள​வி​லான தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும் என மாற்​றப்​பட்​டது. 6 மாதங்​க​ளுக்கு ஒரு​முறை இத்​தேர்வு நடை​பெ​றும். ஒவ்​வொரு வழக்​கு​ரை​ஞ​ருக்​கும் 4 வாய்ப்​பு​கள் தரப்​ப​டும். இந்த தேர்​வில் தேர்ச்சி பெறா​த​வர்​கள் வழக்​கு​ரை​ஞர் பதிவு ரத்து செய்​யப்​ப​டும். தமி​ழ​கத்​தில் தற்​போது இத்​தேர்​வில் தேர்ச்சி பெற்று 1 லட்சத்து 5 ஆயி​ரம் பேர் பதிவு செய்​துள்​ள​னர். இவர்​க​ளில் 65 ஆயி​ரம் பேர் அகில இந்​திய பார் கவுன்​சி​லின் 2015-ஆம் ஆண்டு விதி​க​ளின்​படி சான்​றி​தழை சமர்ப்​பித்​துள்​ள​னர். எஞ்​சிய 45 ஆயி​ரம் பேர் பெரு வணிக நிறு​வ​னங்​கள், தனி​யார் நிறு​வ​னங்​க​ளின் ஆலோ​ச​கர்​க​ளாக பணி​யாற்​று​கின்​ற​னர். 

ஓராண்​டில் தமிழ்​நாட்​டில் படித்த 2-3 ஆயி​ரம் பேர், வெளி மாநி​லங்​க​ளில் படித்த 2 ஆயி​ரம் பேர் உள்​பட மொத்​தம் 5 ஆயி​ரம் பேர் வழக்​கு​ரை​ஞர்​க​ளா​கப் பதிவு செய்​கின்​ற​னர். தமிழ்​நாடு புதுச்​சேரி பார் கவுன்​சி​லின் நீண்​ட​நாள் கோரிக்​கையை ஏற்று தமி​ழக அரசு அறி​வித்​துள்ள இளம் வழக்​கு​ரை​ஞர்​க​ளுக்​கான உத​வித்​தொகை அறி​விப்​புக்​காக தமி​ழக முதல்​வர் மற்​றும் தமி​ழக சட்டத்​துறை அமைச்​ச​ருக்கு நன்றி கூறு​கி​றோம். கரோனா கால​கட்​டத்​தில் அறி​விக்​கப்​பட்​டுள்ள இந்த உத​வித் தொகை அறி​விப்பு இளம் வழக்​கு​ரை​ஞர்​கள் தங்​க​ளது சட்டத்​தி​றனை மேம்​ப​டுத்த பெரிய உத​வி​யாக இருக்​கும் என்​றார் அவர்.

​இ​ளம் வழக்​கு​ரை​ஞர் ஆர்.​சந்​தோஷ்​ (MS- 892/2018):

 புனி​த​மான தொழி​லாக கரு​தப்​ப​டும் வழக்​கு​ரை​ஞர் தொழில் நீதியை நிலை நாட்டு​வ​தில் முக்​கிய பங்கு வகிக்​கி​றது. இளம் வழக்​கு​ரை​ஞர்​க​ளின் ஆரம்​பக் கால​கட்​டம், மூத்த வழக்​கு​ரை​ஞர்​க​ளையே நம்​பியே இருக்​கும். அவர்​க​ளி​டம் ஜூனி​ய​ராக பணி​யாற்​றும் போது தான் நீதி​மன்ற நடை​மு​றை​களை நாங்​கள் நேர​டி​யாக கற்​றுக் கொள்ள முடி​யும். இது​போன்ற சூழ​லில் அதி​க​பட்​சம் மூத்த வழக்​கு​ரை​ஞர்​க​ளி​டம் ரூ.5 ஆ​யி​ரம் வரை மாத வரு​வா​யாக கிடைக்​கும். அந்த தொகை​யில் எங்​க​ளது போக்​கு​வ​ரத்​துச் செலவு உள்​ளிட்ட பிற தேவை​க​ளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்​டும். கரோனா நோய்த் தொற்​றால் நீதி​மன்​றங்​கள் மூடப்​பட்​ட​தால் கடு​மை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளோம். இது​போன்ற இக்​கட்​டான தரு​ணத்​தில் தமி​ழக அரசு அறி​வித்​துள்ள உத​வித்​தொகை  எங்​க​ளுக்கு பேரு​த​வி​யாக இருக்​கும். இதற்​காக  தமிழ்​நாடு புதுச்​சேரி பார்​க​வுன்​சில் மற்​றும் தமி​ழக அர​சுக்கு நன்றி தெரி​வித்​துக் கொள்​கி​றேன்.

​இ​ளம் வழக்​கு​ரை​ஞர் ஜெ.லா​வண்​யா​ (MS- 494/2018) :

நீதி​மன்​றங்​க​ளில் நேரடி விசா​ர​ணை​க​ளின்​போது இளம் வழக்​கு​ரை​ஞர்​க​ளுக்கு ஏதா​வது சிறு சிறு பணி​கள் கிடைக்​கும். குறிப்​பாக வழக்​குத் தாக்​கல் செய்​தல், டிராஃப்​டிங், உத்​த​ர​வு​களை  எடுத்து வரு​தல், மூத்த வழக்​கு​ரை​ஞர் ஆஜ​ராக முடி​யாத சம​யங்​க​ளில் கால அவ​கா​சம் கோரு​தல் உள்​ளிட்ட பணி​கள் இருக்​கும். சில சம​யம் நண்​பர்​கள் மூலம் இது​போன்ற பணி​கள் கிடைக்​கும். அதன் மூலம் ரூ.100 – ரூ.200 வரு​மா​ன​மும் கிடைக்​கும். 

ஆனால் கடந்த 3 மாதங்​க​ளுக்கு மேலாக எந்​தப் பணி​யும் இல்லை, வரு​மா​ன​மும் இல்லை. இந்​நி​லை​யில் தமி​ழக அர​சின் இந்த உத​வித்​தொகை எங்​க​ளது குடும்​பத்​தின் குறைந்​த​பட்ச தேவை​க​ளைப் பூர்த்தி செய்​து​கொள்ள உத​வி​க​ர​மாக இருக்​கும். இதற்​காக தொடர்ந்து முயற்​சித்த தமிழ்​நாடு புதுச்​சேரி பார்​க​வுன்​சில் தலை​வர் உள்​ளிட்ட நிர்​வா​கி​கள் மற்​றும் தமி​ழக அர​சுக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கி​றோம் என்​றார் அவர்.

அர​சா​ணை​யில் கூறப்​பட்​டுள்ள தகு​தி​கள்
வழக்​கு​ரை​ஞர்​க​ளுக்​கான உத​வித் தொகை பெற விண்​ணப்​பிக்​கும் போது அடிப்​ப​டைத் தகு​தி​கள் குறித்த அம்​சங்​களை அர​சா​ணை​யாக தமி​ழக அரசு வெளி​யிட்​டுள்​ளது. அதன் விவ​ரம்:​
1.    விண்​ணப்​ப​தா​ரர்​கள் சட்டப்​ப​டிப்பை முடித்​தி​ருக்க வேண்​டும்
2.    அரசு சட்டக் கல்​லூ​ரி​யில் படித்​தி​ருக்க வேண்​டும்
3.    தமிழ்​நாடு புதுச்​சேரி பார்​க​வுன்​சி​லில் பதிவு செய்​தி​ருக்க வேண்​டும்}​அ​கில இந்​திய பார்​க​வுன்​சி​லின் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி அவ​சி​யம்
4.    ஆறு மாதங்​க​ளுக்கு ஒரு முறை வழக்​கு​ரை​ஞர் தொழில் பயிற்சி செய்​வது தொடர்​பாக மூத்த வழக்​க​றி​ஞ​ரி​டம் இருந்து கடி​தம் பெற்று அதைச் சமர்ப்​பிக்க வேண்​டும்
5.    விண்​ணப்​ப​தா​ரர்​கள் 30 வய​துக்​குள் இருக்க வேண்​டும்
6.    இரு ஆண்​டு​க​ளுக்கு மாதம் ரூ.3000 பெற தகு​தி​யா​ன​வர்​கள்
7.    ஆதார் அட்டை வைத்​தி​ருக்க வேண்​டும்
8.    தமிழ்​நாட்​டைச் சேர்ந்​த​வர்​க​ளாக இருக்க வேண்​டும்
9.    விண்​ணப்​ப​தா​ரர் குடும்​பத்​தின் ஆண்டு வரு​மா​னம் ரூ.2.5 லட்​சத்​துக்கு மிகா​மல் இருக்க வேண்​டும்
10.    இந்த உத​வித்​தொகை ஒரு குடும்​பத்​தில் ஒரு​வ​ருக்கு மட்டுமே வழங்​கப்​ப​டும்.

எப்​படி விண்​ணப்​பிப்​பது?
இ​ளம் வழக்​கு​ரை​ஞர்​க​ளுக்​கான தமி​ழக அர​சின் உத​வித்​தொகை கோரி விண்​ணப்​பிக்​கும் விண்​ணப்​ப​தா​ரர்​கள் தேவை​யான சான்​று​க​ளு​டன் http://ams.bctnpy.com என்ற தமிழ்​நாடு புதுச்​சேரி பார் கவுன்​சி​லின் இணை​ய​தள முக​வ​ரி​யில் விண்​ணப்​பிக்​க​லாம்.
 

Leave a Reply