மானாமதுரையில் ஊழியருக்கு கரோனா: கனரா வங்கி மூடல்

18 views
1 min read
canara

ஊழியருக்கு கரோனா தொற்றால் கனரா வங்கி மூடல்

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கனரா வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து புதன்கிழமை காலை வங்கி மூடப்பட்டது. இதனால் வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். 

மானாமதுரையில் மேல்கரை பகுதியில்  உள்ள ஒரு கட்டிடத்தின் மேல்தளத்தில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் 30 வயதுள்ள ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து புதன்கிழமை காலை வங்கி மூடப்பட்டது. இவர் மானாமதுரை தெற்குரத வீதி பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில்  கனரா வங்கியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 

வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதால் கடந்த இருநாட்களாக வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வங்கியில் பணியாற்றும் பிற ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது. கனரா வங்கி அருகே செயல்படும் பிரபல வெள்ளி விற்பனைக் கடையும் அடைக்கப்பட்டது.
 

TAGS
கரோனா

Leave a Reply