மிசோரத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 என பதிவானது

22 views
1 min read
4.3 magnitude earthquake jolts Mizoram’s Champai

கோப்புப்படம்

மிசோரம் மாநிலத்தில் சம்பாய் மாவட்டத்தில் இன்று பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவுகோலில் 4.3 என பதிவானது.

இதுகுறித்து தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ள தகவலில், ‘வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் சம்பாய் மாவட்டத்தின் தென்கிழக்கே நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்தில் இது மையம் கொண்டுள்ளது.

சரியாக பிற்பகல் 2.28 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அசாம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

நிலநடுக்கத்தினால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மிசோரத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS
Earthquake

Leave a Reply