மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, அவரது மகனுக்கு கரோனா

15 views
1 min read
thangamani

அமைச்சர் தங்கமணிக்கு கரோனா,

சென்னை: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி மற்றும் அவரது மகனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணியும், அவரது குடும்பத்தினருக்கும் நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அமைச்சருக்கும், அவரது மகன் தரணிதரனுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இருவரும் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவருக்குமே கரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இரண்டாவது அமைச்சரும், 10-வது எம்எல்ஏவும் ஆவார். (அதிமுகவில் 6வது எம்எல்ஏ). ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 

TAGS
coronavirus

Leave a Reply