மின்சாரம் பாய்ந்து இறந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை 

17 views
1 min read
peacock

காரைக்காலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

காரைக்கால் பகுதியில் கருவேல மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் மயில்கள் வசித்து வருகின்றன. இரை தேடுவதற்காக பறந்து செல்லும்போது மின் கம்பியின் மூலம் மின்சாரம் பாய்ந்து உயிரிந்துவிடுவது எப்போதாவது நிகழ்கிறது.

இந்த வகையில் காரைக்கால் திருவள்ளுவர் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஒரு மயில் சாலையில் இறந்து கிடந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியினர் உயிரிழந்த மயிலுக்கு தேசியக் கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். தகவலின்பேரில் அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் வந்த வனத்துறையினர், இறந்த மயிலை பெற்றுக்கொண்டு சென்றனர். மயில் இற்ந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து அதனை பெற்றுச்சென்று முறைப்படி புதைக்கின்றனர். திருவள்ளுவர் நகர் பகுதியில் எப்போதும் இல்லாத வகையில், தேசியப் பறவை என்பதால் தேசியக் கொடி போர்த்தி மக்கள் மரியாதை செலுத்தினர்.
 

TAGS
karaikkal

Leave a Reply