முதல்வர் பழனிசாமிக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்!

20 views
1 min read
international title for EPS

முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்காவில் இருந்து செயல்படும் சர்வதேச ரோட்டரி அமைப்பு சிறப்பு பட்டம் அளித்து கெளரவம் செய்துள்ளது.(கோப்புப்படம்)

 

சென்னை: முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்காவில் இருந்து செயல்படும் சர்வதேச ரோட்டரி அமைப்பு சிறப்பு பட்டம் அளித்து கெளரவம் செய்துள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சர்வதேச ரோட்டரி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பானது உலகம் முழுவதும் குடிநீர், சுகாதாரம், நோய்த்தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களை தேர்தெடுத்து பாராட்டி வருகிறது.

அவர்களுக்கு ‘Paul Harris Fellow’ என்னும் கவுரவப் பட்டம் அளிக்கப்படுகிறது.

தற்போது முதல்வர் பழனிசாமிக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு ‘Paul Harris Fellow’ சிறப்பு பட்டம் அளித்து கெளரவம் செய்துள்ளது.

Leave a Reply