முதல் திருமணம் மறைப்பு: விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

17 views
1 min read
trichy

திருச்சியில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி எடமலைப்பட்டி புதுத்தெருவைச் சேர்ந்தவர் விஷ்ணு(24 ). ஓட்டுனர் இவரது மனைவி நீலவேணி(18). இருவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுகளுக்க முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுடன் மாமனார் குருமூர்த்தி, மாமியார் வானதி ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் திருச்சி விமானநிலையம் பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண் தன்னை விஷ்ணு முதலாவதாக திருமணம் செய்துகொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி விஷ்ணு வீட்டில் தகராறு செய்தார்.
அப்போது அங்கிருந்த விஷ்ணு குடும்பத்தினர் லாவண்யாவை மிரட்டி அனுப்பி வைத்துவிட்டனர். இதுகுறித்து நீலவேணி விஷ்ணுவிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் மனமுடைந்த நீலவேணி இன்று காலை 7 மணி அளவில் விஷ்ணு வேலைக்கு சென்ற சமயத்தில் படுக்கை அறையில் மண்ணெண்ணையை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 
நிகழ்விடத்திலேயே உயிரிழந்த அவரது உடலை எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

TAGS
ARIYALUR suicide

Leave a Reply