முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா தொற்று

21 views
1 min read
former minister Valarmathi affected by corona

பா.வளர்மதி

 

 

முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்காட்டுள்ளது.

முன்னதாக, அதிமுகவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, கோவை சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. 

அதேபோன்று திமுகவில், எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பின்னர் ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்த கார்த்திகேயன், செய்யூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசு, செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினரான கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

TAGS
coronavirus

Leave a Reply