முன்னுதாரணங்களை உருவாக்குவோம்: நளினி, முருகன் வழக்கில் நீதிமன்றம் கருத்து

21 views
1 min read
highcourt

முன்னுதாரணங்களை உருவாக்குவோம்: நளினி, முருகன் வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கருத்துமுன்னுதாரணங்களை உருவாக்குவோம்: நளினி, முருகன் வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கருத்துமுன்னுதாரணங்களை உருவாக்குவோம்: நளினி

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் தனது தாய், தங்கையுடன் பேச அனுமதி கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் முருகனுக்கு, வெளிநாட்டில் வசிக்கும் தனது தாய் மற்றும் சகோதரியுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை  உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில்,முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு எனது மகள் நளினியும், மருமகன் முருகனும் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். வேலூர் சிறையில் இருவரும்  இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் முருகனின் தந்தை இலங்கையில் காலமானார். இறந்த தனது தந்தையின் உடலை காணொலி காட்சி மூலம் காண அனுமதி வழங்கக் கோரிய முருகனின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது. 

எனவே  இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், லண்டனில் உள்ள அவரது மூத்த சகோதரியிடமும் தினமும் 10 நிமிடங்கள் கட்செவியில் உள்ள  காணொலி வசதி மூலம் பேச அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வேலுமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், செல்லிடபேசியில் காணொலி காட்சி மூலம் பேச அனைத்து கைதிகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் நளினிக்கும், முருகனுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. கரோனா தொற்று காலத்தில் கைதிகளை உறவினர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் பேச கூடாது என கூறவில்லை. சிறையில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களுடன் பேச அனுமதிக்க சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என வாதிட்டார். 

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான மாநில அரசு  தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். 

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் கைதிகள் இதற்கு முன் பேசியதற்கு முன்னுதாரணங்கள் இல்லாவிட்டால், நாம் அதை உருவாக்குவோம் எனக் கூறி, இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து, விசாரணையை வரும் ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

TAGS
court news

Leave a Reply